கட்டுநாயக்கா விமானநிலைய புனரமைப்பு வேலைகள் நாளை முதல் நடைபெறவுள்ளதால், நாளையிலிருந்து காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை விமானநிலையம் மூடப்படவுள்ளதுடன், வெளிநாட்டுக்குப் பயணம் செய்யும் பயணிகள் அனைவரையும் 5 மணித்தியாலத்திற்கு முன்னர் விமானநிலையத்திற்கு வருமாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வெளிநாடு செல்லும் பயணிகளை 5 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்குள் பிரவேசிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கா விமானநிலைய ஓடுபாதையானது 5 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
அத்துடன் இவ்வேலைத்திட்டமானது நெதர்லாந்து அரசாங்கத்தின் கண்காணிப்பின்கீழ் சீன நிறுவனமொன்றினால் இக்கட்டுமான வேலைகள் நடைபெறவுள்ளன.
மேலும், புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற விமான ஓடுப்பாதையானது 3 ஆயிரத்து 335 நீளமும் 45 மீற்றர் அகலமும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.