உலகின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ்களையும் ஒரே கொக்க-கோலா டின்னில் அடைத்துவிடலாம் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை பிரித்தானிய கணிதவியலாளர் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ், 107 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது, மேலும் 2.3 மில்லயன் மக்களை கொன்றுள்ளது.
அப்படிப்பட்ட கொரோனா வைரஸின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்று எல்லோரும் அறிந்திருப்போம். ஆனால் அதன் உண்மையான அளவு (size) என்ன என்பது பலருக்கும் தெரியாது.
இந்நிலையில், பிரித்தானியாவின் பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணித நிபுணரான கிட் யேட்ஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் அனைத்து வைரஸ் துகள்களும் ஒரு மூடிய இடத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டால் அதன் அளவு என்னவாக இருக்கும் என்ற ஒரு இயற்பியல் ஆய்வை செய்துள்ளார்.
இதன் மூலம், தற்சமயத்தில் உலகத்தில் உள்ள மொத்த கொரோனா வைரஸ்களையும், ஒரே ஒரு கொக்க-கோலா கேனில் அடைத்துவிடலாம் எனும் கணிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கொரோனா வைரஸை அதன் துகள்களையும் புரதத்தையும் பிரித்து மொத்தமாக அளந்துள்ளார். ஒன்னொரு கொரோனா வைரஸ் துகளின் விட்டம் 100 நானோமீட்டர் (1 மீட்டர்=1 பில்லியன் நானோமீட்டர்) எனக் கூறப்படுகிறது.
அனைத்து கணக்கீடுகளுக்கும் பிறகு, உலகில் தரசமயத்தில் இருக்கும் மொத்த COVID-19 வைரஸ் 330 மில்லி கோக் கேனை விட குறைந்த இடத்தை ஆக்கிரமிக்கும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.