பிரித்தானியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படவுள்ள நிலையில் மார்ச் 8-ஆம் திகதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை 13.5 மில்லயன் மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அத்னைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் பிரித்தானியா பூட்டுதலிலிருந்து முற்றிலுமாக வெளியேற திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் மார்ச் 8-ஆம் திகதி முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், அடுத்த மாதம் முதல் வெளியிடங்ககளில் வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த இரண்டு பேர் சந்திக்க, பூங்காவில் உட்கார்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அடுத்த மாதம் முதல் சுற்றுலா செல்லவும் அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.