கரித்தூள் பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் உதவுகிறது.
அந்தவகையில் தற்போது இதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
தேவையானவை
- கிளிசரின் சோப்பு கட்டி – பாதி அளவு
- கரித்தூள் – 3 டீஸ்பூன்
- தண்ணீர்- அரை கப்
- கிளிசரின் – 1 டீஸ்பூன்
- ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- எசன்ஷியல் ஆயில் – அரை டீஸ்பூன்
- ஷியா பட்டர் – 1 டீஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்
செய்முறை
கிளிசரின் சோப்பு கட்டியை சிறு துருவலாக சீவுங்கள். (நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய சோப்பு துண்டுகள் இருந்தாலும் அதை சேர்க்கலாம் ) இதை சிறு கிண்ணத்தில் அரை கப் தண்ணீர் விட்டு துருவிய சோப்பை சேர்த்து டபுள் பாயிலிங் மெத்தட் முறையில் சூடாக்கவும்.
சோப்புகள் உருகும் வரை கலக்கி எடுக்கவும். இது உருகியதும் கரித்தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி எடுக்கவும். பிறகு ஷியா பட்டர் சேர்க்கவும். (கரித்தூள் கவனமாக தேர்ந்தெடுக்கவும்)
கரித்தூள் சேர்த்ததும் அவை நன்றாக் கரைந்ததும் இறக்கி இப்போது கிளிசரின், தேங்காய் எண்ணெய், எசன்ஷியல் எண்ணெய்.
கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி தனி வாணலியில் அதே டபுள் பாயிலிங் மெத்தட் படி சூடு செய்து கரித்தூள் கலவையில் கலக்கவும்.
உஙளுக்குக்கு நறுமணம் தேவை எனில் உங்களுக்கு பிடித்த வாசனை எண்ணெய் சேர்க்கலாம். இதை சோப்பு மோல்டில் ஊற்றவும். ஊற்றும் போது குமிழ்கள் போல் இருந்தால் உடனே அதை அகற்றி எடுக்கவும்.
மோல்ட்டில் சோப் கெட்டியானதும் சோப்பு கட்டிகளை வெளியே எடுக்கவும். இப்போது கரித்தூள் சோப்பு தயார்.
நன்மைகள்
- கரித்தூள் கொண்டு தயாரிக்கப்படும் சோப்பு கட்டிகளை தொடர்ந்து பயன்படுத்தினால் நீங்கள் எளிதாக சருமத்தை பராமரிக்க முடியும்.
- கரித்தூள் சோப்பு முகப்பரு மற்றும் பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது சருமத்தின் அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சு எடுக்க கூடும்.
- சருமத்தில் இருக்கும் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்கு துகள்களை நீக்கி நச்சுக்களை வெளியேற்றும்.
- சருமத்தின் மூன்று அடுக்கிலும் உள் நுழைந்து எண்ணெய்ப்பசையை வெளியேற்றும்.
- சூரியனின் புற ஊதாக்கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமம் மென்மையாக வைத்திருக்க உதவும்.