உடல் எடை குறைக்க பல முறைகள், பல டயட்டுகள் கடைப்பிடிக்க படுகிறது. சிலர் உணவு முறையாலும், சிலர் உடற்பயிற்சியாலும், சிலர் யோகா, மூச்சு பயிற்சி முறைகளை பின்பற்றி கூட உடல் எடை குறைக்கின்றனர்.
எந்த ஒரு செயலிலும் உடனடி தீர்வு நிலையாக இருக்காது. உடல் எடையிலும் அப்படி தான். கோல் ராபின்சன் என்பவர் ஒரே வாரத்தில் நான்கு கிலோ வரை உடல் எடை குறைக்க ஸ்நேக் டயட் என்பதை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த டயட் எப்படிபட்டது, இதை பற்றி உடல் பருமன் நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என இங்கு காணலாம்…
கோல் ராபின்சன்!
கோல் ராபின்சன் என்பவர் தன்னை தானே ஃபாஸ்டிங் கோச் என அடையாளப்படுத்தி கொள்கிறார். தான் உருவாக்கியுள்ள புதிய டயட்டை இவர் ஸ்நேக் டயட் என கூறுகிறார்.
ஸ்நேக் டயட்!
ஸ்நேக் டயட் என்றால் என்ன? ஸ்நேக் டயட் டயட் என்பது ஒரு நாளுக்கு ஒரு முறை அல்லது ஓரிரு நாளுக்கு ஒருமுறை உணவு உட்கொள்ளும் டயட் என கோல் ராபின்சன் கூறுகிறார்.
விரதம்!
நமது ஊர்களில் மார்கழி, கார்த்திகை, புரட்டாசி என சில மாதங்களில் கடவுளுக்கு விரதம் இருக்கும் முறை போன்றது தான் கோல் ராபின்சன் கூறும் டயட். இதனால் தான் தன்னை ஃபாஸ்டிங் கோச் என கூறி கொள்கிறார் போல.
எடை குறைப்பு!
எந்த விதமான சோர்வும், பக்க விளைவுகளும் இன்றி, முதல் வாரத்தில் 8-9 பவுண்டுகள் வரை உடல் எடை குறைத்ததாக கோல் ராபின்சன் கூறுகிறார்.
மருத்துவர் குறிப்பு!
உடல் பருமன் சிறப்பு நிபுணர்கள் இது போன்ற டயட் சரியானது அல்ல என்கின்றனர். டயட் என்பது உடல் எடையை உடனே குறைப்பதாக அமைவது அல்ல. சீரான முறையில், ஆரோக்கியமான முறையில் அமைய வேண்டும். இல்லையேல் பல உடல்நல கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம் என கூறுகின்றனர்.