ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாசிடோனியாவில் முஸ்லிம் அகதி பெண்ணும், கிறிஸ்துவ பொலிஸ் அதிகாரியும் காதலித்து திருமணம் செய்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
ஈராக்கை சேர்ந்த 20 வயதான Noora Arkavazi என்ற பெண்ணும், Bobi Dodevski ஆணுமே இவ்வாறு காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
தற்போது இருவரும் மாசிடோனியாவில் மகிழச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் தங்களது காதல் கதையை Noora Arkavazi பகிர்ந்துள்ளார்.
ஈராக்கில் நடைபெற்று வரும் ஐ.எஸ் எதிரான போர் காரணமாக குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய Noora Arkavazi கடந்த ஆண்டு மார்ச் மாதம் செர்பியன் எல்லையை அடைந்துள்ளார்.
எல்லையில் ஆங்கிலம் தெரிந்த ஒரே அதிகாரியாக Bobi Dodevski திகழ்ந்துள்ளார். மொழி பிரச்சனை காரணமாக Noora Arkavazi, Bobi Dodevskiயை சந்திக்க இருவருக்கும் கண்டதும் காதல் எற்பட்டுள்ளது.
இதனையடுத்து யூலை மாதமே இருவரும் திருமணம் செய்துள்ளனர். Noora Arkavazi பெற்றோர் இந்த திருமணத்தை முழு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, Noora Arkavazi குடும்பத்தினர் அகதிகளாக ஜேர்மனயில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். Noora Arkavazi மாசிடோனியாவில் Bobi Dodevskiயுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இனம், மாதம், மொழி என அனைத்தையும் கடந்து அகதியும், பொலிஸ் அதிகாரியும் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் நெகழிச்சியை ஏற்படுத்தியுள்ளது.