காதினை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்துவார்கள்.
இதில் பரிந்துரைக்கப்படாத பொருட்களும் அடங்கும். இவற்றினைப் பயன்படுத்துவதனால் காதில் பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
இதேவேளை கொட்டன் பட் எனப்படும் சாதனம் பொதுவாக உலகளவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது இதனைப் பயன்படுத்துவதும் பாரிய ஆபத்தானது என கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது காது மற்றும் குரவல் வளையில் தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வினை American Academy of Otolaryngology எனும் அமைப்பு மேற்கொண்டிருந்தது.
காதினுள் காணப்படும் மெழு போன்ற பதார்த்தமானது இயல்பாகவே சுத்தப்படுத்துவதற்காக சுரக்கப்படும் பதார்த்தமாகும்.
ஆனால் கொட்டன் பட்டினை காதினுள் செலுத்தும்போது மெழுகானது காதின் பின்புறமாக தள்ளப்படுகின்றது.
இவ்வாறு தள்ளப்படும்போது மெழுகு காதுடன் பகுதியாக தொடர்புடைய குரவல் வளையினை அண்மித்து அடைந்துவிடுகின்றது.
குறித்த மெழுகானது தூய பதார்தமாக காணப்படாமையினால் அதில் கிருமிகளின் செயற்பாடு அதிகரித்து குரல் வளையில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
இதேவேளை காதினை துப்பரவு செய்வதற்கான மெழுகு பின்னோக்கி தள்ளப்படுவதனால் தூசு, துணிக்கைகள் அதிகளவில் படிந்து காதினுள்ளும் தொற்றுநோய் ஏற்பட ஏதுவாக அமைகின்றது என எச்சரிக்கப்பட்டுள்ளது.