நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் கம்பஹா மாவட்டத்திலிருந்தே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று 774 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில், கம்பஹா மாவட்டத்தில் 208 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 41 பேர் நீர்கொழும்பையும், 26 பேர் கடவத்தையையும் சேர்ந்தவர்கள்.
கொழும்பிலிருந்து 179 பேர், இரத்தினபுரியிலிருந்து 82 பேர், கண்டியிருந்து 66 பேர், களுத்துறையிலிருந்து 63 பேர், குருநாகலில் இருந்து 45 பேரும், பதுளையிலிருந்து 29 பேரும், அம்பாறையிலிருந்து 14 பேர், காலியில் இருந்து 13 பேர், கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து தலா 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
மொனராகலை, மாத்தளை, புத்தளம், மாத்தறை, மன்னார், மட்டக்களப்பு, நுவரெலியா, அனுராதபுரம், பொலன்னருவை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து 10 க்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்படவில்லை.
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் இருந்து அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 27,940 ஆக அதிகரித்துள்ளது.கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,842 ஆக உயர்ந்துள்ளது.
இந்த காலப்பகுதியில் களுத்துறை, கண்டி, குருநாகல், காலி, இரத்னபுரி, அம்பாறை, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய எட்டு மாவட்டங்களில் 1000 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.