உசாபிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியையும், மாணவரும் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக ஆரணாயக்க பதிக்கு பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் ரசஞ்சன மெண்டிஸ் இன்று (16) தெரிவித்தார்.
பாடசாலையின டி வகுப்பு தற்காலிகமாக மூடப்பட்டு, வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
உசாபிட்டியில் உள்ள தஸ்வத்த பகுதியில் வசிக்கும் மாணவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொற்று ஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். ஆசிரியைக்கு நடத்திய பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.
நெருங்கிய உறவினர் ஒருவர் மூலம் மாணவர் தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென கருதப்படுகிறது. அவர் தொற்று உறுதியாகும் வரை தொடர்ந்து பாடசாலை சென்றுள்ளார். மாணவரை தினமும் தன்னிடம் அழைத்து பேசும் ஆசிரியைக்கு இருந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைக்காக இன்று (16) கோவிட் சிகிச்சை மையத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.