தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா தடுப்பூசி போடுவதில் நடந்த ஊழல் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி Francisco Sagasti முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதற்கட்டமாக சீனாவின் Sinopharm தடுப்பூசியின் 3,00,000 டோஸ்களை பெற்ற பெரு, பிப்ரவரி 7ம் திகதி முதல் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதற்கு முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் ரகசியமாக தடுப்பு போட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து பெருவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அரசாங்க ஊழியர்கள் உட்பட 487 பேர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ரகசியமாக Sinopharm தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஜனாதிபதி Francisco Sagasti அறிவித்துள்ளார்.
487 பேரில் முன்னாள் ஜனாதிபதி Martin Vizcarra, முன்னாள் அரசாங்கத்தின் அரசு ஊழியர்கள், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Elizabeth Astete மற்றும் சமீபத்தில் ராஜினாமா செய்த முன்னாள் சுகாதார அமைச்சர் Pilar Mazzetti ஆகியோர் அடங்குவர் என தெரிவித்துள்ளார்.
பெருவில் தடுப்பூசிகள் பரவலாகக் கிடைப்பதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி Martin Vizcarra தடுப்பூசி போடுக்கொண்டது தொடர்பாக பெருவின் சுகாதார அமைச்சர் Pilar Mazzetti அளித்த ராஜினாமாவை சனிக்கிழமை ஏற்றுக்கொண்டாதாக ஜனாதிபதி Francisco Sagasti தெரிவித்துள்ளார்.