Loading...
இலங்கையின் பூர்வீக தேவாலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் தேசிய கிறிஸ்தவ பாதிரியார்கள், தொடர்பாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள கருத்து ஆழ்ந்த வருத்தமளிப்பதாக இலங்கை தேசிய கிறிஸ்தவ சபையின் பொதுச் செயலாளர் பாதிரியார் ரோஹன் டி எஸ் ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
பேராயர் மல்கம் ரஞ்சித் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலே அவர் இதனைக்கூறியுள்ளார்.
Loading...
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
குறிப்பாக சில மதத் தலைவர்கள் கிறிஸ்தவர்களை வன்முறையில் தாக்குமாறு தங்கள் ஆதரவாளர்களை அழைக்கும் நேரத்தில், பேராயர் போன்றவர்களின் அறிக்கைகள், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செயற்பாடாக அமைகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading...