இப்படத்தைத் தொடர்ந்து, வடிவேலு ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்களுக்கு தோல்வியையே அளித்தன. இதனால் சில காலம் நடிப்பில் இருந்து விலகியிருந்த வடிவேலு விஷாலின் ‘கத்திச்சண்டை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் ‘சிவலிங்கா’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், வடிவேலு மீண்டும் சிம்புதேவனுடன் இணைந்து ’23-ம் புலிகேசி’யின் 2-ம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் 23-ம் புலிகேசி அரசருக்கு பிறக்கும் வாரிசுகள் தான் படத்தின் நாயகர்கள். இதில், புலிகேசி அரசரின் மகன்களாக காமெடி மற்றும் சீரியஸ் என இரட்டை வேடங்களில் வடிவேலு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ’24-ம் புலிகேசி’ என படக்குழு பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.