நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் மாதவன் ‘ரீ-என்ட்ரி’ ஆகியிருக்கிறார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், புஷ்கர் காயத்ரி இயக்கும் ‘விக்ரம் வேதா’ படத்தில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டார். இதில் மாதவனுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
‘விக்ரம்-வேதா’ படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் மாதவனின் தோற்றம் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகர் மாதவன் ‘விக்ரமாதித்யன்’ என்னும் பெயரில் தான் நடித்து வருவதாகக் கூறி புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மாதவனின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.