காய்கறிகள் இல்லாத சாப்பாடு ஒரு முழுமையான உணவை சாப்பிட திருப்தியை தராது. சில காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடமாட்டார்கள். ஆனால் சில காய்களை எல்லோரும் மிகவும் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட காய்களில் ஒன்று தான் “முட்டைகோஸ்”.
பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அவை வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை. இவை அனைத்திலும் நல்ல அளவில் சத்துக்கள் அடங்கியுள்ளன.
உடல் நலனில் அக்கறை கொண்டுள்ள பலரும் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும் அவற்றில் என்ன மாதிரியான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன போன்ற பல்வேறு தகவல்களை திரட்டுகிறார்கள்.
நம்முடைய சமையலில் பயன்படுத்தும் அனைவருக்கும் பிடித்த முட்டைகோஸ் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ளது. இதை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது நம்முடைய உடல் பல ஆரோக்கிய நன்மைகளை பெறுகிறது. முட்டை கோஸை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்முடைய சருமம் ஆரோக்கியமடைந்து பொலிவுடன் மாறும்.
உடல் எடையை குறைக்க
இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதே ஆகும். முட்டை கோஸ் ஜூஸில் குறைவான கலோரியே உள்ளதால் உடலில் அதிகபடியாக கொழுப்பும் சேராது. இதனை குடிப்பதால் உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழித்து எளிதாக உடல் எடையை குறைக்க உதவும்.
அல்சர்
அல்சர் உள்ளவர்கள் முட்டைகோஸ் தண்ணீர் பருகி வருவதினால் விரைவில் குணமடைய முடியும். ஏனெனில் முட்டைகோஸில் இருக்கும் விட்டமின் சி வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.
சருமம் பளபளக்க
முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
உடல் சூட்டைத் தணிக்க
உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தினந்தோறும் முட்டைகோஸ் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
புற்று நோய்
புற்று நோய் முட்டைகோஸ் பலவகையான புற்று நோய்களுக்கெதிராக சிறப்பாக செயல்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினந்தோறும் முட்டைகோஸ் சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலிலுள்ள செல்களின் ஆயுள்தன்மை நீட்டிக்கிறது. இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக கூறுகின்றனர்.
தோல் நலம்
நமது உடலை வெளிப்புற சூழலிலிருந்து பாதுகாப்பது நமது தோல் எனும் சருமம் ஆகும். பல காரணங்களால் சிலருக்கு தோலில் சில இடங்களில் நிறமாற்றங்கள் ஏற்படும். இன்னும் சிலருக்கு தோலில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும். முட்டைகோஸ் பக்குவம் செய்து தினமும் அருந்தும் நபர்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
ஒவ்வொரு உயிரினங்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்றாகும், ஆரோக்க்கியமாக நோய் நொடியில்லாமல் வாழ வேண்டுமானால் அவர்களுக்கு கண்டிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். முட்டைகோஸ் சாற்றில் இருக்கக்கூடிய ஹிஸ்டிடின் என்ற சத்து உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும்.