கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடைதொழிற்சாலை ஒன்று சில வருடங்களாக இயங்கி வருகிறது.
இத் தொழிற்சாலையில் சுமார் 1000ற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
உலகெங்கும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் பல நாடுகள் அச்சத்தில் உள்ளனர்.பல இடங்கள் முடக்கப்பட்டும் காணப்படுகின்றன. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் அவர் தற்போது செிகிச்சையில் உள்ளார். அதன் பின் அலட்சிய போக்காக விட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினரால் மேலும் பலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்ற இத்தொழிற்சாலையில் வெளிமாவட்டத்தில் இருந்தும் பணிக்கு வருகின்றனர். தற்போது இத் தொழிற்சாலையில் பணிபுரிகின்ற உயர் பணியாளர்கள் தமது வீடுகளிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆனால் இதுவரையில் இந்த ஆடைதொழிற்சாலையானது முடக்கப்படவில்லை யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையின் நிமித்தம் வருகை தரும் பணியாளர்கள் பற்றி எவரும் அக்கறைகொள்ளவில்லை. 3வது நபர் தொற்றுக்குள்ளான போது ஆடைத்தொழிற்சாலையில் பணியாளர்களினால் பணி நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு சென்ற ஆடைதொழிற்சாலை நிர்வாகத்தினர்.அவர்களின் வறுமை நிலையினை சுட்டிக்காட்டி நீங்க்ள் வேலை செய்யாவிட்டால் வேலையில் இருந்து நிறுத்திவிடுவோம் என்று அச்சுறுத்தி உள்ளனர்.
வறுமை நிலை கருத்திற்கொண்டு தமது உயிரையும் பொறுட்படுத்தாது பணியில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் நடப்பது என்ன??
Loading...
Loading...
Loading...