கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புன்னை நீராவி பகுதியில் 19 போத்தல் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குமாரசாமிபுரம் பகுதியில் 6 போத்தல் கசிப்பினை விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புளியப்பொக்கனை கல்லாறு பிரமந்தனாறு பகுதிகளில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணானவகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 6 டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இவர்கள் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தருமபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கின்சிலி கேரத் தெரிவித்துள்ளார்.