இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இதுவரை தேசிய அடையாளம் அட்டை கிடைக்கவில்லை என்றால் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. இதன் போது மாணவர்களின் அடையாள அட்டைகள் குறித்த பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பிரதேச செயலகத்திற்கு சென்று மாணவர்களின் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அதிபர்களிடம் வியானி குணதிலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சில மாணவர்களுக்காக தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தை சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்கள் பயன்படுத்த முடியும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.