2017 ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி தற்போது சில கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலடி ஒன்றை வழங்கியுள்ளார்.
மஹிந்தவின் இவ்வாறான சில கனவுகள், கனவுகளாகவே நிறைவடையும். ஆகவே 2017 இல் அரசாங்கத்தை கவிழ்க்க இயலாது என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் எந்த ஒப்பந்தங்களும் மேற்கொள்ள போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சிக்கு மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தை 2017 க்குள் கவிழ்க்க போவதாக முன்னாள் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.