வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவை, நாளை திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையையடுத்து கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் மீண்டும் முதல் தடவையாக நாளைய தினம் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி மற்றும் பதுளை வரையிலான ரயில் சேவை நாளை ஆரம்பமாகின்றது.
வடமாகாணத்திற்கான ரயில் சேவை கல்கிசை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களிலிருந்து காங்கேசன்துறை வரை செல்லவுள்ளதுடன் கிழக்கு மாகாணத்திற்கு மட்டக்களப்பு வரையிலான ரயில் சேவை மற்றும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வரையிலான ரயில் சேவையும் நாளை இடம்பெறவுள்ளன.
தென் பகுதிக்கான ரயில்சேவை கொழும்பு கோட்டையிலிருந்து பெலியத்தை வரை இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.