கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன. விலை மலிவாகவும் மிக எளிதாகவும் கிடைப்பதால் கொய்யாப் பழத்தைப் பற்றிய நன்மைகளை வெகுசிலர் அறியமாலே விட்டுவிட்டனர்.
ஆனால் உண்மையில் கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் கொய்யாப் பழம் மிகவும் உதவி செய்கிறது.
கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.
கொய்யாவில் மிகவும் சுவையுடையது என்றால் சிகப்பு கொய்யாவைச் சொல்லலாம். குறைவான கலோரி,அதிக நார்ச்சத்து கொண்டது இந்த கொய்யாப்பழம். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த கொய்யாப்பழம் கிடைக்கிறது.
உடல் எடையை குறைக்க
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று கொய்யா பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைகின்றது
சளி தொல்லைக்கு
சளி தொல்லை இருப்பவர்கள் இதை தினமும் ஒன்று சாப்பிட்டால் சளி தொல்லை நீங்கும்
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் ஏற்பட்டாலே, அதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிடக் கூடாது என்று அநேக கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
சருமத்திற்கு
கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துக்கள் உள்ளது. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. தோல் வறட்சியை நீக்கி, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. மேலும் முதுமை தோற்றத்தை குறைத்து இளமையாக மாற்றுகிறது.
முகப்பருக்கள் மறைய :
முகப்பருக்களில் இருக்கும் பாக்டிரியாக்களை அழித்து அதன் பரலவை தடுக்க கொய்யா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். இதை தொடர்ந்து செய்ய பருக்கள் மறையலாம்.
கரும் புள்ளிகள் மறைய :
கொய்யா இலை , சிட்டிகை மஞ்சள் மற்றும் கற்றாழை மூன்றையும் சேர்த்து மைய அரைத்து அதை முகம் கழுத்து என தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் 2 முறை செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.
கரும் புள்ளிகள் மறைய : கொய்யா இலை , சிட்டிகை மஞ்சள் மற்றும் கற்றாழை மூன்றையும் சேர்த்து மைய அரைத்து அதை முகம் கழுத்து என தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் 2 முறை செய்து வாருங்கள் பலன் கிடைக்கும்.