ஒரு நுளம்புச் சுருளில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை 135 சிகரெட்டுக்களில் இருந்து வெளியாகும் நச்சுப்புகைக்குச் சமமானதென உலக சுகாதார நிறுவனத் திட்டப் பணிப்பாளர் சம்பத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நுளம்புச் சுருள் உற்பத்தியில் சரியான தரம் இன்னும் பின்பற்றப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிகரெட் புகையில் புற்றுநோய்க் காரணிகள் தீவிரமாக உள்ளன.
நுளம்புச் சுருள்கள் மூலமாகவும் பெருமளவிலான புற்றுநோய்க் காரணிகளும் விஷப் புகையும் வெளியேறுவதாகவும் சம்பத் ரண சிங்க கூறியுள்ளார்.
காபன் மொனக்ஸயிட், போமெல்டினைட், காபன் டயொக்ஸயிட், நைட்ரஜன் நக்ஸயிட் உள்ளிட்ட புற்றுநோய்க் காரணிகளும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களும் நுளம்புச் சுருள் புகையில் அடங்கியுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.