Loading...
திருகோணமலை – கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட அடப்பனாவெட்டை பகுதியைச் சேர்ந்த நபரொருவர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இந்த விடயத்தை திருகோணமலை சுகாதார சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கிண்ணியா தள வைத்தியசாலையில் நீரிழிவு குருதி அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
Loading...
அடம்பனாவெட்டை பகுதியைச் சேர்ந்த நாகூரான் (72 வயது) என்பவரே கோவிட்டால் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.
குறித்த நபருக்கு பெறப்பட்ட பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Loading...