Loading...
Keiana Herndon (25) என்ற இளம் பெண் தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
சமூகவலைதளமான பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடும் பழக்கம் கொண்ட Keiana நேற்று பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் தன் இரண்டாவது குழந்தையை வைத்து கொண்டு பாடல்களை பாடியுள்ளார்.
இதை ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட அவரின் பேஸ்புக் நண்பர்கள் பார்த்து கொண்டிருந்தனர்.
பாடி கொண்டிருக்கும் போதே திடீரென மூச்சு விட சிரமப்பட்ட Keiana பின்னர் மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவர் வீட்டில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இது குறித்து Keianaன் குடும்பத்தார் கூறுகையில், அவர் இறந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரிய வரும். அவர் ஏற்கனவே தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவர் பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் மயங்கி விழும் போது அதை பார்த்து கொண்டிருந்த ஒரு பேஸ்புக் நண்பர்கள் கூட அவருக்கு உதவவில்லை. மாறாக அவர் மயங்கி விழுவதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருந்தது என வருத்தத்துடன் அவர்கள் கூறியுள்ளனர். இவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
Loading...