Loading...
பெர்சிவரென்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் ஓடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் திகதி, அட்லாஸ் ரொக்கெட் மூலம் பெர்சிவரென்ஸ் என்ற ஆய்வுர்தியை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA விண்ணில் ஏவியது.
அந்த ரொக்கெட் விண்வெளியில் மணிக்கு 19,000 கி.மீ வேகத்தில் பயணித்து, சுமார் 470 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்துக்கு சென்றடைந்தது.
அதிலிருந்த பெர்சிவரென்ஸ் ரோவர் கடந்த 18-ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் உள்ள Jezero பள்ளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
Loading...