மாவீரா்கள் யாருக்கு சொந்தம்?? மாவீரா்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த முனையும் சிரீதரன் எம்.பிக்கு எதிராக வலுக்கிறது சர்ச்சை!
• முன்பு, மாவீரா் தினவிழாவை நினைவு கூர்வதற்கோ அல்லது அனுஷ்டிப்பதற்கோ இலங்கை இராணுவத்தினா்கள் தடைபோட்டார்கள். ஆனால்.., இன்றோ சிறிதரன் போன்ற அரசியல்வாதிகள் தடைபோடுகிறார்கள்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலா் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனா்.
மட்டக்களப்பு மங்களாராம விகாரைக்கு பொறுப்பான சுமனரத்ன தேரர் வந்து கனகபுரத்தில் விகாரை அமைக்க அடிக்கல் நாட்டினால் …. “தமிழர்களோடு சண்டித்தனம் காட்டும் பிரதேச சபையின் செயலலாளா் க. கம்சநாதன் சுமனரத்ன தேரருடன் இந்தமாதிரி சண்டிதனம் காட்டுவாரா??
இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளா் க. கம்சநாதன் தன்னுடைய அனுமதியின்றி சுடலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டிருந்தாா்.
அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இது பிரதேச சபையின் உரிமைக்குட்பட்ட காணி அல்ல எனச் சுட்டிக்காட்டியதோடு, இராணுவம் இவ்வளவு நாளும் இங்கு கட்டிடங்கள் அமைத்து இருந்த போது உங்களுடைய பிரதேச சபையும் சட்டங்களும் எங்கு போனது எனவும் கேள்வி எழுப்பியதோடு தங்களது பணியை தொடா்ந்தும் முன்னெடுத்தனா்.
கரைச்சி பிரதேச சபையின் வாகனத்தில் சபையின் செயலாளருடன் பாராளுமன்ற உறுப்பினா் ஸ்ரீதரன் எம்.பியின் பிரத்தியேக ஊடகவியலாளா் ஒருவா் வருகை தந்தது தங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்,
அரசியல் அழுத்தம் காரணமாகவே பொது நனைவுச் சின்னம் அமைக்கும் பணியை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருதுவதாக முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளியான கு. பிரபாகரன் (எழிலன்) தெரிவித்தாா்.
இதனை தொடா்ந்து கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சா் . கிளிநொச்சி பொலிஸாா் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்று பொது நினைவு சமாதி அமைக்கும் பணியில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனா்.
கிளிநொச்சியிலிருந்து 119 தொலைபேசிக்கு அழைப்பு எடுத்து மாவீரா் துயிலுமில்லம் காணியில் சட்டவிரோத பணிகள் இடம்பெறுகிறது என முறைப்பாடு செய்தமையினை தொடா்நது தாம் இங்கு வருகைதந்தாகவும்.
இன்று வியாழன் நான்கு மணிக்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சமுகளிக்குமாறு அங்கு பிரதேச சபை செயலாளா், பிரதேச செயலாளா் உள்ளிட்ட பலரை அழைத்து பேசி தீர்வுக்கு வருவோம் எனக் கூறி சமாதி அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளனா்.
முதலாம் இணைப்பு: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைகிறது பொதுக்கல்லறை (படங்கள்)
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை இன்று பன்னிரண்டு முப்பது மணியளவில் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் இணைந்து நாட்டியிருந்தனார்.
யுத்த நிறைவிற்கு பின்னர் உடைக்கப்பட்டிருந்த குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டதுடன் யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில் அங்கு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது