நடிகையர் திலகம் சாவித்திரி லட்சம் லட்சமாக சம்பாதித்து, சொந்த படம் எடுத்து, குடி,போதை பழக்கத்துக்கு ஆளாகி, கிழிந்த நாராய் படுக்கையில் கிடந்தது, கடைசி நேர வறுமை, நோயில் அல்லாடி மறைந்து போனார்.
தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின், சாவித்திரியின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக போகும் அந்த படத்தின் டைட்டில் மகா நதி என்று சொல்லப்படுகிறது.
சாவித்திரியாக நடிக்க சமந்தா கமிட் ஆகியுள்ளார் என்றார்கள். ஆனால், சமந்தாவின் பார்வையில் சாவித்திரியின் கதை விரியுமாம். அந்த முக்கிய கேரக்டரில் தான் சமந்தா நடிக்கிறார் என்று தெளிவு படுத்த பட்டுள்ளது.
சாவித்திரியாக நடிக்க நித்யா மேனன், வித்யா பாலன் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக, கீர்த்தி சுரேஷ் நடிக்க போகிறாராம்.
வரும் மே மாதம் ஷூட்டிங் துவங்க உள்ளதாம்.
அதெல்லாம் சரி, கீர்த்தி சுரேஷ் போதை பழக்கத்தில் என்றால் எப்படி? என்று தானே கேட்கிறீர்கள்.
மே மாதம் ஷூட்டிங் ஆரம்பித்தால், சாவித்திரியாக போதை பழக்கம் கொண்டவராக நடிச்சி தானே ஆவணும்?! அதான்…இப்பவே, ஹி ஹி!