இந்திய வம்சாவளி பெண் ஒருவர் வேலைக்கார பெண்ணை பட்டினி போட்டு, அடித்து உதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி பெண் ஆன, காய்த்ரி முருகையன்(40) என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் வீட்டில், மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங்நகாய்டான் என்ற பெண் வேலைக்காரியாக கடந்த 2015-ஆம் ஆண்டு வேலை சேர்ந்துள்ளார்.
ஏழ்மை காரணமாகவும், தனது 3 வயது மகனை காப்பாற்றவும் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் பியாங்நகாய்டான் திடீரென்று இறந்து கிடந்தார்.
இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. அவரது உடலில் 31 காய வடுக்கள், 47 வெளிப்புற காயங்கள் இருந்தன.
இது குறித்து காயத்ரி முருகையனிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் வேலைக்கார பெண்ணை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பியாங் நகாய்டான் வீட்டு வேலைக்கு சேர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு அவரை காய்த்ரி சித்ரவதை செய்யத் தொடங்கியுள்ளார்.
பியாங்நகாய்டானுக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டு அடித்து உதைத்துள்ளார். இதுபோன்று தினமும் பல்வேறு சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இதில் மூளையில் காயம் அடைந்து இறந்துள்ளார். இறக்கும் போது பியாங் நகாய்டான் உடல் எடை 24 கிலோவாக இருந்துள்ளது, பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது.
இதையடுத்து காயத்ரியை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.