ஐபிஎல் ஏலத்தில், கிருஷ்ணப்பா கவுதமை டோனியின் சென்னை அணி 9 கோடிக்கு மேல் எடுக்க என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கடந்த 18-ஆம் திகதி ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. ஐந்த ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சுழற்பந்து வீச்சாளரான கிருஷ்ணப்பா கவுதமை, டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இவரைப் போய் ஏன் தேவையில்லாமல் சென்னை அணி 9 கோடிக்கு மேல் கொடுத்து எடுக்கனும், என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலை தற்போது கிருஷ்ணப்பா கவுதமை எடுத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளது.
அதாவது, இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி வந்தபோது அவருக்கு மாற்று வீரராக கருதப்பட்டவர் தான் கிருஷ்ணப்ப கவுதம்.
இவர்கள் இருவருமே சிறப்பாக பந்துவீசி கூடியவர்கள் அஸ்வின் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்ததால் கவுதமிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவர்கள் இருவருமே சென்னை மைதானத்தில் சிறப்பாக விளையாட கூடியவர்கள். அஸ்வின் சென்னை அணியில் இருந்து விலகிய பிறகு சிறந்த ஸ்பின்னர் இல்லாமல் டோனி தவித்து வந்தார். இதன் காரணமாக்வே கிருஷ்ணப்ப கவுதமை ஏலத்தில் 9.25 கோடி கொடுத்து சென்னை அணி வாங்கியுள்ளது.