பேஸ்புக் மற்றும் கூகிள் தேடுபொறி போன்ற சமூக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு பணம் செலுத்த வேண்டிய புதிய சட்டத்தை அவுஸ்திரேலியா நிறைவேற்றியுள்ளது.
இந்நடவடிக்கைக்கு அமெரிக்காவின் பல தொழினுட்ப நிறுவனங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் அதன் பின் அவுஸ்திரேலிய அரசுடன் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், பேஸ்புக் சமூக வலைத்தளத்தினால் அவுஸ்திரேலியாவுக்கான அனைத்து செய்திச் சேவைகளும் முடக்கப்பட்டதோடு பின்னர் அது அகற்றப்பட்டது.
இதன் பின்னரே அவுஸ்திரேலியா இப்புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங்களுக்கு கூகிள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் கணிசமானளவு பணம் செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தள செய்திகளுக்கான மதிப்பை பெற்றுக்கொடுப்பதில் முன்மாதிரியாகத் திகழ்கின்றது.