Loading...
கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் ஒரு காய் என்றால் அது வெள்ளரிக்காய். இதில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.
Loading...
ஆரோக்கியமான வாழ்வுக்கு, தினசரி நம் உணவில் ஒரு வெள்ளரிக்காயை சேர்த்து கொள்வது சிறந்தது என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் நம் உணவில் தினமும் வெள்ளரிக்காயை சேர்த்துக் கொள்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், இதில் உள்ள நீர்ச்சத்து நமது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நாம் வெளியே செல்லும்போது கூட உண்பதற்காக எடுத்துச் செல்ல உகந்த ஒரு பொருள்.
- வெள்ளரிக்காயில் நார்ச்சத்து நிரம்பிய உள்ளதால், இது மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. மேலும் இது சீரான உடல் இயக்கத்திற்கும் வழிவகுக்கிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி உணவில் வெள்ளரியை சேர்த்துக்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.
- வெள்ளரிக்காயை நம் உணவில் சேர்த்துக் கொள்வது எடையை குறைக்க மேலும் உதவும். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன. மேலும் இந்த வெள்ளரிக்காய் எளிதில் பசியைத் தூண்டாது என்பதால், அதிகப்படியான உணவுகளை உண்பதில் இருந்து நம்மைத் தடுக்கிறது.
- வெள்ளரிக்காய் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க நமக்கு உதவுகிறது. இதனால் இது அடிப்படையிலேயே நீரிழிவு மற்றும் அது தொடர்பான பல பிரச்சினைகளை வராமல் தடுக்கிறது. எனவே நீரிழிவு நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள தினமும் நமது உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக் கொள்வது நன்று.
- வெள்ளரிக்காயில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே இது நமது உடலை பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. இதுமட்டுமன்றி இந்த வெள்ளரிக்காயில் நிரம்பியுள்ள நற்பண்புகள் நமது உடலில் நாட்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
- வெள்ளரிக்காயில் நிரம்பியுள்ள வைட்டமின் ஏ, நமது கண்பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே பணிக்காக தான் நாம் அதிக அளவில் லேப்டாப்களை பயன்படுத்துகிறோம் என்றாலும், கண் பார்வை போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு தினமும் வெள்ளரிக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.
- இயற்கையாகவே நமது சருமம் பளபளக்க வெள்ளரிக்காய் நமக்கு உதவுகிறது. . இதில் நிரம்பியுள்ள சத்துக்கள் நமது சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இயற்கையாகவே அழகைக் கூட்டிக் கொள்ள நீங்கள் இந்த வெள்ளரிக்காயை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Loading...