சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை வாசத்துக்குப்பிறகு, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார் சசிகலா. ஆனால் கடந்த 15 நாட்களாக அவர் யாரையும் சந்திக்கவில்லை. இன் நிலையில் நேற்று(25) நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்கள் திடீரென சசிகலாவை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது. ஆனால் வெளியே நின்ற பத்திரிகையார்களை சந்திக்காமல் சீமான் அவர்கள் சென்றுவிட்டார். இதனால் உள்ளே என்ன நடந்து என்று தெரியாத நிலையில்.
இந்தநிலையில், அவர் என்ன பேசினார் என்பது குறித்து நாம் தமிழர் வட்டாரத்தில் விசாரித்தோம்: இப்போது மட்டுமல்ல, ஏற்கெனவே சசிகலா அம்மையார் பரோலில் வந்தபோதே அண்ணன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். ஆனால், அப்போது வெளியில் யாருக்கும் தெரியாது. நேற்று பேசியது, 2009 காலகட்டத்தில் எங்கள் அண்ணனும் தொடர்ச்சியாக சிறையில் இருந்திருக்கிறார். தற்போது , சசிகலா அம்மையாரும் நான்காண்டுகளாக சிறையில் இருந்துவிட்டு வந்திருக்கிறார். அதனால், சிறைசார்ந்த அனுபவங்களை அண்ணன் பகிர்ந்துகொண்டார். சசிகலா அம்மையாரிடமும் அவரின் சிறை அனுபவத்தை மிகப் பொறுமையாக அண்ணன் கேட்டுக்கொண்டார். அதிலேயே அரைமணி நேரம் ஓடிவிட்டது.
அரசியல் ரீதியாக அண்ணன் ஒரேயொரு கோரிக்கையைத்தான் முன்வைத்தார். ‘மத்திய பா.ஜ.கவால் கடந்த நான்காண்டுகளில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து விட்டீர்கள். இப்போது இருப்பது போலவே தேர்தல், அதனைத் தொடர்ந்து சில காலம் இருந்தால் போதும். மத்தியில் அடுத்தும் பா.ஜ.கதான் ஆட்சிக்கு வரும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை. நிச்சயமாக, அ.தி.மு.கவைக் காப்பாற்றிவிடலாம். அதனால், தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள். கண்டிப்பாக அவர்கள், அ.தி.மு.க, அ.ம.மு.க என்கிற இரண்டு கட்சிகளையுமே அழிக்கத்தான் நினைப்பார்கள். அதனால் , பா.ஜ.க ஆதரவு என்கிற நிலைக்கு மட்டும் ஒருபோதும் சென்றுவிடாதீர்கள்’ என கோரிக்கை வைத்தார். சசிகலா அதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்.
சசிகலா அம்மையாரின் கணவர் நடராஜன் தமிழ் அமைப்புகளுக்கு பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார். அது போக அவர் ஈழத் தமிழர்களின் பெரும் ஆதரவாளராக இருந்துள்ளார். இதன் அடிப்படையின் தான் சசிகலா அம்மையாரை சீமான் பார்கச் சென்றுள்ளார் என்று கூறினார்கள்.