மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் வீட்டு வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சப்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்தாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். நேற்று (25) இரவு 9 மணியளவில் மனிதத்லை வீசப்பட்டுள்ளது. மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தில் இருந்து தலை திருகி எடுக்கப்பட்டடதாக பொலிசாரின் முதலகட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
மனிதத்தலை வீசப்பட்ட வீட்டு உரிமையாளர் தமிழ்பக்க செய்தியாளரிடம் தெரிவித்த போது, எனது வீட்டுக்கு முன் வீதியில் நின்று கொண்டிருக்கும் போது மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மாலை ஏழு மணியளவில் வலிந்து என்னுடன் முரண்பட்டுச் சென்றர்.
பின்னர் இரவு 9.30 மணியளவில் எனது வளவினுள் சத்தம் ஒன்று கேட்டது நான் வெளியில் வந்து பார்த்த வேளை மோட்டார் சைக்கிளில் மூவர் தப்பியோடுவதை அவதானிதேன். அதன் பின்னர் எறியப்பட்ட பொருளை பயம் காரணமாக என்னவென்று தெரியமுன்னர் அதனை சவளால் அப்புறப்படுத்தினேன். பின்னர் அது மனிதத்தலையென தெரியவந்தது.
உடனடியாக பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டேன். அவர்கள் வந்து பார்வையிட்டு சம்பவதுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்தனர். அவர்கள் என்னை பயமுறுத்தவே மனிதத் தலையை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தில் இருந்து திருகி எடுத்து எறிந்ததாக ஒத்துக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் நேற்று இரவே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்