நடிகர் விஷால் – மிஷ்கின் முதன்முறையாக இணையும் ‘துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் வி்ஷாலுக்கு வில்லனாக இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நடித்து வருகிறார்.
மேலும் முக்கிய வேடங்களில் பிரசன்னா, வினய் ராய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். விஷாலுக்கு ஜோடியாக ஆக்ஷன் ஹீரோ பிஜு புகழ் அனு இம்மானுவேல் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் நடிக்கவிருப்பதாக முதலில் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ‘தல 57’ படத்தில் அக்ஷரா பிசியாக இருப்பதால், அவருக்கு பதில் ஆண்ட்ரியாவை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஷாலுடன் நடிக்கும் வாய்ப்பை அக்ஷரா ஹாசன் நழுவவிட்டிருக்கிறார்.