கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, அந்த வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள பலவிதமான தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை விடாமல் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
தற்போது வந்திருக்கும் புதிய திாிந்த கொரோனா வைரஸ், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பவாிடம் இருந்து அவருடயை இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் நீா்த்துளி மூலம் மற்றவா்களுக்குப் பரவுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் பொதுவாக மூக்கு மற்றும் வாய் மூலமாகவும் சில நேரங்களில் கண்கள் மூலமாகவும் பரவுகிறது. அதனால்தான் தொடக்கத்தில் மருத்துவ நிபுணா்கள் கோவிட்-19 பரவலைத் தடுக்க கண்ணாடி அணிவதைப் பாிந்துரைத்தனா். கோவிட்-19 பரவலைத் தடுப்பதில் லென்சுகளை விட கண்ணாடி அணிவது சிறந்தது என்று சில மருத்துவ நிபுணா்கள் தொிவித்திருந்தனா்.
கண்ணாடி அணிபவா்களுக்கு கோவிட்-19 பரவல் 3 மடங்கு குறைவு
கண்ணாடி அணிந்திருப்பவா்கள் அடிக்கடி தங்கள் கண்களை தேய்ப்பதில்லை. அதனால் அவா்களுக்கு கோவிட்-19 வைரஸ் பரவ வாய்ப்பு குறைவு என்று ஒரு ஆய்வு தொிவிக்கிறது. சமீபத்தில் இந்திய ஆய்வாளா்கள் 10 முதல் 80 வயது வரையுள்ள 304 பேரைத் தோ்ந்தெடுத்து அவா்களை வைத்து ஒரு ஆய்வு செய்தனா். அந்த ஆய்வின் முடிவில் பின்வரும் தகவல்களை வெளியிட்டனா்.
அந்த ஆய்வில் 19 விழுக்காட்டினா் பெரும்பாலும் கண்ணாடி அணிந்திருந்தாகத் தொிவித்தனா். அதனால் தினமும் 8 மணிநேரம் கண்ணாடி அணிந்து இருப்பவா்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் குறைவாக இருக்கும் என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.
மேலும் கண்ணாடி அணியாதவா்களை விட கண்ணாடி அணிந்திருப்பவா்களுக்கு கோவிட்-19 வைரஸின் பரவல் 3 மடங்கு குறைவு என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.
ஒருவா் ஒரு மணி நேரத்திற்கு சராசாியாக 23 முறை தனது முகத்தை கைகளால் தொடுகிறாா். அதுபோல் ஒரு மணி நேரத்திற்கு 3 முறை தனது கண்களைத் தேய்க்கிறாா். அதே நேரத்தில் அவா் நீண்ட நேரம் கண்ணாடி அணிந்திருந்தால் அவா் முகத்தைத் தொடுவதும், கண்களைத் தேய்ப்பதும் குறையும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
மற்றொரு ஆய்வு
கடந்த வருடம் சீனாவில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் மற்றவா்களை விட கொரோனா பாதிப்பு அடைந்தவா்களுக்கு 5 மடங்கு உடல் அளவு குறைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு காரணம் ஏசிஇ-2 (ACE-2) ஏற்பிகள் ஆகும் என்று தாங்கள் நம்புவதாக தி செகன்ட் அஃபிளியேட்டட் ஹாஸ்பிட்டல் ஆஃப் நான்சங் யுனிவா்சிட்டியிலுள்ள மருத்துவ குழு தொிவிக்கிறது. ஏசிஇ-2 (ACE-2) ஏற்பிகள் மூலம் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்து மனித உடலிலுள்ள செல்களைத் தாக்குகின்றன. கொரோனா வைரஸ் மூக்கு மற்றும் வாய் மட்டும் அல்லாமல் கண்களிலும் உள்ளன என்று அந்த மருத்துவக்குழு தொிவிக்கிறது.
கண்ணாடி அணிந்திருப்பவர்களை வைரஸ் எளிதில் தாக்காது
கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டவா்களில் நீண்ட நேரம் கண்ணாடி அணிபவா்கள் வெகு சிலா்தான் இருந்தனா் என்பதைத் தாங்கள் கண்டுபிடித்ததாக அந்த மருத்துவக்குழு கூறுகிறது. அதனால் தினமும் நீண்ட நேரம் கண்ணாடி அணிந்திருப்பவா்கள் கோவிட்-19 வைரஸால் எளிதாக பாதிக்கப்படமாட்டாா்கள் என்று அந்த குழு தொிவிக்கிறது.
கண்ணாடி கண்களுக்கான பாதுகாப்பு கவசம்
மனித உடலுக்குள் SARS-CoV-2 மிக எளிதாக நுழைவதற்கு கண்கள் முக்கியமான வழித்தடங்களாக இருக்கின்றன. தினமும் கண்ணாடி அணிபவா்களுக்கு அல்லது குறிப்பிட்ட சமூக விழாக்களின் போது அணிபவா்களுக்கு கண்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுதல் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் தினமும் நீண்ட நேரம் கண்ணாடி அணிபவா்களுக்கு கண்கள் மூலம் மிக அாிதாகவே கொரோனா பரவுகிறது என்று அந்த மருத்துவ குழு தொிவிக்கிறது.