மக்கள் பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தலை முடி உதிர்வு. பள்ளிக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்தப் பிரச்னை இருக்கிறது.
ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் இந்தப் பிரச்னை காணப்படுகிறது. போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கங்கள், முறையற்ற பழக்கவழக்கங்கள் மற்றும் புவி வெப்பமயமாதலும் முடி உதிர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அதிக வேலைச்சுமை காரணமாகவே பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். அத்தோடு அதிக பணம் செலவாகுமே என்ற பயமும் இருக்கும்.
ஆனால் வீட்டிலேயே இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி மிக எளிமையாக உங்கள் கூந்தலை ஆரோக்கியமானதாக வைத்திருக்க முடியும். தற்போது முடி உதிர்வை தடுக்கும் ஒரு சூப்பரான ஹேர்பேக் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- வெங்காயம்- 2
- மயோனைஸ்- 3 ஸ்பூன்
- தயிர்- 25 மில்லி
செய்முறை
வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவிட்டுப் பயன்படுத்தவும்.
இந்த வெங்காய ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிர்வுப் பிரச்சினை தீர்வுக்கு வரும்.