கொவிட் நோயால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை புதைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டமைக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பதிவொன்றை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கொவிட் நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்கள் கட்டாய தகனத்துக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் வெளியாகின.
இந்தநிலையில் குறித்த சரீரங்களை புதைப்பதற்கு அனுமதியளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் நேற்று வெளியிட்டது.
இந்தநிலையில் அந்த தீர்மானத்தை மேற்கொண்டமைக்காக அரசாங்கத்துக்கு நன்றித் தெரிவித்துக்கொள்வதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் கடந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தநிலையில், இந்தவிடயம் குறித்தும் அரசாங்கதுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்த போது குறிப்பிட்டிருந்தார்.