புதினா, தக்காளி, தயிர், உருளைக் கிழக்கு, தேங்காய்ப்பால்… இவையெல்லாம் சாப்பிடுவதற்கில்லை… இதில் சிம்பிளான அழகு குறிப்புகளும் உண்டு. இதனை தொடர்ந்து உபயோகப்படுத்தி வர சாதாரண முகமும் சூப்பராகும்!
1. ஒரு டேபிள் ஸ்பூன் பொடித்த ஓட்சுடன், சிறிது தண்ணீர் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து முகம் கழுவிப் பாருங்கள். களையிழந்த முகத்துக்கும் ஒரு ஜொலிப்பு கிடைக்கும். இந்த ரெசிபியை வாரம் ஒருமுறை போட்டுக்கலாம்.
2. சிறிது புதினாவுடன் தயிர் கலந்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். முகத்தில் தடவி பத்து நிமிடத்துக்குப் பிறகு கழுவினால் முகத்திலுள்ள கருப்புத் திட்டுகள் மாயமாக மறையும்.
3. ஒரு தக்காளியை மிக்ஸியில் அரைத்து குழைத்து எடுத்து கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் உரைய வைத்து எடுத்துக்கணும். இந்த ஐஸ் தக்காளியை லைட்டாக முகத்தில் தேய்த்துத் தடவி, சிறிது நேரத்துக்கு பிறகு முகம் கழுவினால் முகத்தில் ஒரு கூடை மூன்லைட்தான்!
4. வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் அப்பிக்கொண்டு சில நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் முகச் சுருக்கங்கள் மறையும்.
5. எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டேபிள் ஸ்பூன்… இந்தக் கலவையை முகத்தில் தடவி, கழுவிப் பாருங்களேன். வெயிலால் ஏற்பட்ட கருப்புத் திட்டுகள் வெளுக்கத் தொடங்கும்.
6. முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து அதில் சிறிது தேன் கலந்துக்கணும். இதை முகத்தில் தடவி, சிறிது நேரத்துக்குப் பிறகு கழுவினால் முகத்துக்கு புதுப் பொலிவு கிடைக்கும்.
7.முகத்தில் சொரசொரப்பாக காணப்படும் கரும்புள்ளிகள்தான் முகச்சருமத்தின் எதிரி. கரகரப்பாக அரைத்த அரிசிமாவு ரெண்டு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர்… இதை முகத்தில் தடவி லேசாக தேய்த்தபிறகு முகம் கழுவினால் சருமம் மென்மையாகும்.
8. முகத்தில் அதிகம் பருக்கள் இருந்தால் தினமும் தயிரை முகத்தில் தடவி, இருபது நிமிடம் கழித்து முகம் கழுவினால் பருக்கள் குறையத் தொடங்கும்.
9. ஒரு டீஸ்பூன் முல்தாணி மெட்டியில் ரெண்டு டீஸ்பூன் உருளைக்கிழங்குச் சாறு கலந்து முகத்தில் தடவிக்கொண்டு சிறிது நேரத்துக்குப் பிறகு முகம் கழுவினால் சுத்தமான சருமம் கிடைக்கும்.