பிரான்சில், வரும் மாதத்தில் இருந்து எரிவாயு கட்டணம் மிக கணிசமாக உயர்வடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைவாக இருந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இந்நிலையில், மார்ச் 1-ஆம் திகதி முதல் எரிவாயு கட்டணம் விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக Commission de régulation de l’énergie அறிவித்துள்ளது. மொத்தமாக 5.7 சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்க உள்ளது.
சமையலுக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 1.5% வீதமும், சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 3.4% வீதமும்,
சமையல், வெந்நீர் மற்றும் வெப்பமூட்டிக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 5.9% வீதமும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.
குளிர் கால தேவை கருதி இந்த விலைக்கட்டணம் அதிகரிக்கப்படுவதாக Commission de régulation de l’énergie தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.