Loading...
பொதுவாக காய்கறிகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடங்கியிருக்கும்.
அப்படி பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் காய்கறி தான் பீட்ரூட். நல்ல அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட்டை, சிலர் பச்சையாகவோ, சிலர் வேக வைத்தோ, இன்னும் சிலர் ஜூஸ் வடிவிலோ உட்கொள்வார்கள்.
Loading...
இருப்பினும் இதனை அதிகமாக எடுத்து கொள்ளக்கூடாது. இது உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.
அந்தவகையில் தற்போது பீட்ரூட் அதிகமாக சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பீட்ரூட்டுகளில் ஆக்ஸலேட்டுகள் நிறைந்துள்ளதால் சிறுநீரகக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிறுநீரகத்தில் கல் பிரச்சினை உள்ளவர்கள் பீட்ரூட் உண்பதை தவிர்க்க வேண்டும்.
- சிலருக்கு பீட்ரூட்டால் ஏற்படும் ஒவ்வாமை படை, சொறி, அரிப்பு, காய்ச்சல் ஆகிய நோய்கள் மற்றும் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும்.
- பீட்ரூட்டை உண்பதால் உங்கள் மலத்தின் நிறம் சிவப்பு அல்லது கருப்பாக மாறக்கூடும். இது மலத்தில் இரத்தம் இருப்பதைப் போன்று தோன்றக்கூடியது. பீட்ரூட்டை உண்ட பிறகு மலத்தில் நிறமாற்றம் தீவிரமாக இல்லையென்றாலும், இரத்தம் இருந்தால் அது கவலைக்குரியது.
- குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் பீட்ரூட் அல்லது பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்ட பிறகு உங்கள் ரத்த அழுத்தத்தில் ஒரு சரிவை காணலாம். குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- ஜிஐ கோளாறு உள்ளவர்கள் பீட்ரூட்டை தவிர்க்கவில்லை என்றால் வீக்கம், பிடிப்புகள் மற்றும் வாய்வு போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இதில் நைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் வயிற்று வலி ஏற்படலாம். பீட்ரூட்டிற்கு அலர்ஜி இருப்பவர்கள் கூட வயிற்றுப் பிடிப்புக்கு ஆளாவதாக சொல்லுகிறார்கள்.
- கட்டுப்பாடில்லாத நிலையற்ற இரத்த சர்க்கரை அளவை கொண்டவர்கள் பீட்ரூட்டை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் மிதமான உயர் கிளைசெமிக் குறியீடுகள் உள்ளன. அதனால் தான் இயல்பாகவே பீட்ரூட்டில் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கிறது.
- பீட்டைன் என்ற பீட்ரூட்டில் உள்ள ஒருவகை சேர்மம் மற்றும் நைட்ரேட்டுகள் இருப்பதால் கருவையும் கூட பாதிக்க வாய்ப்புள்ளது. அதனால் கர்ப்ப காலத்தில் மிகக் குறைவான அளவில் பீட்ரூட் எடுத்துக் கொள்வது நல்லது.
- பீட்ரூட்டில் அதிக ஆக்ஸலேட்டுகள் உள்ளதால் அது மூட்டு நோய்கள் உருவாக வழி வகுக்கிறது. இதனால் மூட்டுகளில் தீவிர வலி ஏற்படும்.
- பீட்ரூட்டில் தாமிரம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற உலோகச் சத்துக்கள் உள்ளன. அதிகமாக அதை உண்பதால் இச்சத்துக்கள் கல்லீரலில் சேர்ந்து கல்லீரல் மற்றும் கணையத்தை. பாதிக்கச் செய்கிறது.
Loading...