துடுப்பாட்ட வீரர்களின் செயல்பாடு சரியில்லாததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.
மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் எலிசெபத்தில் நடந்த முதல் டெஸ்டில் 206 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை, கேப்டவுனில் நடந்த 2வது டெஸ்டிலும் 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில், நாணய சுழற்சியில் வென்றும், இலங்கை அணிக்கு சாதகமான நிலை இருந்தும், தோல்வியடைந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
மீண்டும் ஒரு முறை எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் அணியை மேசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பி விட்டனர். துடுப்பாட்டத்தில் வீரர்கள் அக்கறை காட்ட வேண்டியது அவசியமானது.
மேலும், லஹிரு குமாரவுக்கு 19 வயது தான் ஆகியது. ஆனால் அவர் பந்துவீச்சில் அசத்திவிட்டார்.
ரபாடா சிறப்பாக செயல்பட்டார். அவர் 2வது இன்னிங்சில் அபாரமாக பந்துவீசி தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி தேடித் தந்தார் என்று கூறியுள்ளார்.