கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போட்ட பிறகு மக்கள் ஊரங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றமாட்டார்கள் என்று Sage விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி எச்சரித்துள்ளார்.
தடுப்பூசி போட்ட பின்னர் நாட்டு மக்கள் தொடர்ந்து விதிகளை பின்பற்றுமாறு பேராசிரியர் Jonathan Van-Tam வலியுறுத்தியதை தொடர்ந்து விஞ்ஞானி சூசன் மிச்சி இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி போடப்பட்டவர்கள் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது குறைவு என Lyme நோய் மற்றும் influenza தடுப்பூசி விநியோகத்திலிருந்து ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
தடுப்பூசி திட்டம் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருவதால், தடுப்பூசி போட்ட பிறகு அதிகமான மக்கள் தங்கள் பாதுகாப்பைக் கைவிடக்கூடும் என்பதே கவலை என Sage விஞ்ஞானியும் பேராசிரியருமான சூசன் மிச்சி எச்சரித்துள்ளார்..
டிசம்பர் முதல் தேசிய கணக்கெடுப்புகளில், சுமார் 29 சதவிகித மக்கள் தடுப்பூசி போட்ட பிறகு தாங்கள் கட்டுப்பாடுகளை குறைவாகவே கடைப்பிடிப்போம் என்றும் 11 சதவீதம் பேர் விதிகளை பின்பற்ற மாட்டோம் என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.