திருமண வாழ்க்கை என்கு சந்தோஷத்தை தராத காரணத்தால் விவாகரத்து பெற்றுக்கொள்ளும் முடிவை எடுத்தேன் என நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
திருமணம் என்பது சிறுவயதில் நான் எடுத்த முடிவு. திருமண வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்காதபோது, அதில் இருந்து விலகுவதற்கு தயங்க கூடாது.
மகிழ்ச்சி இல்லாத அந்த சடங்குக்குள் வறட்டு கவுரவத்துக்காக நீடித்து இருப்பது தவறு. வெளியேறி விட வேண்டும். என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் எனக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது.
ஆனால் எனது குடும்பத்தினர் ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருந்து அந்த வேதனையில் இருந்து என்னை மீட்டு விட்டார்கள்.
தற்போது, 7 படங்களில் நடித்துவருகிறேன். திருமணம் தவிர நான் எடுத்த அனைத்து முடிவுகளும் எனக்கு சந்தோஷத்தையே அளித்துள்ளன என கூறியுள்ளார்.
மேலும், எனது ஆடை விவகாரம் குறித்தும் பலர் விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு பதிலகூற வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.