Loading...
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கட்டுப்பாட்டாளரை பணி நீக்கம் செய்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலையில் அவருக்கு சொந்தமான பெட்டகத்தில் 5 கையடக்க தொலைபேசிகள் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
நீர்கொழும்பு சிறை அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த கையடக்க தொலைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த கையடக்க தொலைப்பேசிகள் எவ்வாறு கிடைக்கப்பெற்றன என்பது தொடர்பில் குறித்த சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் உறுதிப்படுத்த தவறியமைக்கமைவாகவே அவர் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
Loading...