ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மூலம் அதிகமான அரசியல் இலாபம் கிடைத்தது யாருக்கு, யாருக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டது என்பதை மக்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
அதிகமான அரசியல் இலாபம் பெற்ற நபர்களுக்கே, தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட நபர்களை மறைக்கும் தேவை உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை – மயூரபுரவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவரின் 44ஆவது நடமாடு சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வர ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை பிரதான விடயமாக பயன்படுத்திக் கொண்டது.
அன்று அவர்கள் நல்லாட்சி அரசாங்கம் மற்றும் மேலும் சில தரப்பினர் மீது குற்றம் சுமத்தினர். எனினும் இவர்களில் எவரையும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றவாளிகளாக குறிப்பிடவில்லை.
தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் அன்று சுமத்திய குற்றச்சாட்டு வெறும் புஷ்வாணம் என குறிப்பிட்டுள்ளார்.