இலவங்கப்பட்டை மற்றும் தேன் ஆகியவற்றின் கலவையானது சமீபத்திய பிரபல எடை குறைப்பு வழிமுறைகளில் ஒன்று.
இந்த சுவைமிக்க கலவையை முயற்சித்த பின் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் மற்றவர்களோ அதிகமான எடையை குறைப்பதற்கான சிறந்த வழியாக இதைப் பிறருக்கு பரிந்துரைக்கிறார்கள்.
எடை குறைப்பதற்கான உத்தியாக இலவங்கம் மற்றும் தேன் கலவை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும், அவை எடை குறைப்பில் ஒரு பங்கை வகிக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன.
தேவையான பொருட்கள்
- 1 டீஸ்பூன் தேன்
- 1/2 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்
- 1 கப் தண்ணீர்
வழிமுறைகள்
ஒரு சிறிய பாத்திரத்தில் இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேனை தண்ணீருடன் கலக்கவும்.
பின்பு அதை கொதிக்கும் வரை சூடு செய்யவும்.
கொதித்தவுடன் ஒரு டம்ளரில் வடிகட்டி இரண்டு அரை கப் அளவாக பிரிக்கவும்.
காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்பாகவும், தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாகவும் என இரண்டு முறை அருந்துங்கள்.
முக்கிய குறிப்பு
பல நூற்றாண்டுகளாக தேன் மற்றும் இலவங்கம் இயற்கை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் எடை குறைப்பிற்கு அவை உதவி செய்யும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
இருப்பினும் அவை தனித்தனியாக பொதுவாகவே எடை குறைக்க உதவும் மூலப்பொருட்கள் தான் என ஆய்வுகள் சொல்கின்றன.