துபாயில் தொழிலதிபர் ஒருவர் பணத்தை தெருவில் வீசுவது போன்ற வீடியோ வைரலான நிலையில், அது போலியா யூரோ நோட்டுகள் என்பது தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய தொழில்பதிபர் என்று தன்னைக் காட்டிக் கொண்ட நபர் ஒருவர் துபாயில் ரூபாய் நோட்டுகளை தெருவில் வீச்ச் செல்வது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
குறித்த வீடியோவானது அல் குவோஸ் தொழில்துறை பகுதிக்கு அருகில் என்பதால், பொலிசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அந்த நபர் வீசிய யூரோ நோட்டுகள் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தன்னை அதிமானோர் பின்பற்ற வேண்டும், என்பதற்கு ஒரு பகட்டான வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த போலி யூரோ நோட்டுகளை, 1000 டொலர் கொடுத்து ஒரு ஆசியரிடம் வாங்கியுள்ளார். இது குறித்த வழக்கு விசாரணை துபாய் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது குறித்த நபர், நான் ஒரு தொழிலதிபர், பணக்கார வாழ்க்கை வாழ்கிறேன் என்பதை காட்டுவதற்காக இப்படி செய்தேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் 200000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபரின் வீட்டில் இருந்து 40,000 போலி அமெரிக்க டொலர்கள் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.