உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன கெரட்டின் என்னும் உடல் கழிவுதான் நகமாக வளர்கிறது.
நாத்தில் மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று, இரு முக்கிய பாகங்கள் உண்டு. இதில் மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயத் பகுதியைப் போன்றது. இதுதான் நக செல்கள் வளரக் காரணமாக இருக்கின்றது.
ஒருவரின் உடல் நலத்தை நகங்களைக் கொண்டு அறியலாம். ஆனால் சிலரது நகங்களைப் பார்த்து மட்டும் உடல் நலத்தைக் கூற முடியாது.
ஏனெனில் அத்தகையவர்களின் நகங்களில் அழுக்குகள் தங்கியிருப்பதால், அவை நகத்தின் உண்மையான நிலையை வெளிப்படுத்தாமல் தடுக்கிறது. எனவே எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச் சத்து குறைவாகவும் இருந்தால், நகங்களில் வெண்திட்டுகள் காணப்படும். மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாகக் காட்டும்.
பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.
டிப்ஸ் 1
கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக தெரிவது மட்டுமல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்றமளிக்கும். மற்றுமொரு முக்கியமான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.
டிப்ஸ் 2
பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது நறுமண எண்ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாதங்களை 15 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.
டிப்ஸ் 3
சுத்தமாக கழுவுதல் வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால், நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.
டிப்ஸ் 4
நெயில் பாலிஷ் ரிமூவர் பெண்களுக்கு நகங்களை அழகாக்குவதற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் இருக்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும்.
டிப்ஸ் 5
நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்குகளையும் நீக்கிவிடும்.