பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், தற்போது பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஆறு வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் ஏற்கனவே புதிய வகை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது இங்கு பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 6 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் முதல் வழக்கு இங்கிலாந்தின்மனாஸ் நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தென் க்ளூசெஸ்டர்ஷைர் மற்றும் ஸ்காட்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிரேசில்1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை கண்டுபிடிக்கப்பட்ட அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரேசிலியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின், அவர் சோதனை அட்டை எதிலும் தன்னைப் பற்றிய பதிவுகளை நிரப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் மற்றவர்களுக்கு இந்த நோயை பரப்பக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மானஸ் நகரில் ஒன்றும், தெற்கு க்ளூசெஸ்டர்ஷையரில் ஒரே வீட்டில் இரண்டு வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூன்று பேர் ஸ்காட்லாந்தில் குடியிருப்பவர்கள், இவர்கள் பிரேசிலில் இருந்து லண்டனுக்கும், அதன் பின் அவர்கள் அபெர்டீனுக்கு சென்றுள்ளனர்.
அதிகாரிகள் இப்போது மர்ம நபரை அடையாளம் காணவும் அவரை தனிமைப்படுத்தவும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 12-ஆம் திகதி அல்லது 13 ஆம் திகதிகளில் கொரோனா சோதனையை மேற்கொண்டவர்கள் மற்றும் ஒரு முடிவைப் பெறாதவர்கள் அல்லது சோதனை அட்டையை பூர்த்தி செய்யாத எவரும் 119-ஐ அழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத அந்த, மர்ம நபர் ஒரு வீட்டு சோதனைக் கருவி அல்லது சோதனை மற்றும் சேகரித்தல் சேவையை எடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஏனெனில் டிரைவ்-இன் அல்லது வாக்-இன்னின் போது எந்த ஒரு நபரும் சோதனை தளங்கள் விவரங்களை நிரப்புவதை உறுதிசெய்திருக்க வேண்டும்.