பழங்காலத்தில், நம் முன்னோர் பயன்படுத்திய பல பொருட்களை, நாமும் பயன்படுத்தியிருந்தால், உடலை, மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். பொருட்கள் தயாரிக்க பல மூலக்கூறுகள் தேவை என்ற நிலையில், காலப்போக்கில், கிடைக்காத நிலையில், பல பொருட்களின் அருமையே தெரியாமல் போய் விட்டது
பெண்கள் தினமும் சாதாரண மஞ்சளை சருமத்தில் பூசுவதற்கு பதில், கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் சரும அழகை அதிகரிக்கும். கஸ்தூரி மஞ்சளுடன் சில பொருட்களை கலந்து சருமத்திற்கு பயன்படுத்திவதினால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும்.
கஸ்தூரி மஞ்சள் என்றும் அறியப்படும் காட்டு மஞ்சள், தெற்கு ஆசியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் ஆகும். இந்த கஸ்தூரி மஞ்சள் பல்வேறு மருந்திலும், ஒப்பனைப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அழகை அதிகரிக்கும் ஒரு இயற்கை மூலப்பொருளாக இந்த மஞ்சள் அறியப்பட்டு வருகிறது.
அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது.
வீக்கமும் வலியும் குறைய
கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடுபடுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.
பருக்கள், தேமல்கள்
சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது.
குதிகால் வெடிப்பு
குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
கருந்திட்டுகள் மறைய
கஸ்தூரி மஞ்சள் எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. சருமத்தில் உண்டாகும் கருந்திட்டுகளை எதிர்த்து போராட உதவுகிறது . மேலும் அவை திரும்ப வராமல் தடுக்கிறது. தேன், முன்பே கூறியது போல் இயற்கையின் ஒரு வரப்பிரசாதம். எலுமிச்சை, தேன் மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலவை உங்கள் சருமத்தின் உண்மையான அழகை மீட்டுத் தரும்.
வயிற்று வலி
கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.