குழந்தைகளை கவனித்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. முதல் முறையாக நீங்கள் பெற்றோராகியிருந்தால், கட்டாயம் குழந்தை வளர்ப்பு என்பது சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைகள் அனுபவிக்கும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய உடல்நலப் பிரச்சினைகள் பற்றியும் நீங்கள் கவலைப்பட வாய்ப்புள்ளது.
உதாரணமாக, குழந்தைகளின் சிறுநீர் வலுவான துர்நாற்றம் அடித்தால், உங்கள் குழந்தைக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கலாமோ என்ற கவலை இருக்கும். ஆனால் குழந்தையின் சிறுநீர் நாற்றம் அடிப்பதற்கு என்ன காரணம் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்ளுங்கள்.
சிறுநீர் பாதை தொற்று (Urinary Tract Infection):
சிறுநீர் பாதையில் பாக்டீரியா நுழையும் பொது இந்த பிரச்சனை ஏற்படுகிறது.பிறரிடம் இருந்து பரவும் தன்மை கொண்டது கிடையாது என்றாலும், இது விரும்பத்தகாதது மற்றும் இந்த பிரச்சனையை சமாளிப்பது என்பது சற்று கடினம். மேலும் இந்த பிரச்சனை துர்நாற்றம் வீசும் சிறுநீருக்கு வழிவகுக்கும்.
மனித உடற்கூறியல் காரணமாக சிறுநீர் பாதை தொற்று, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. மேலும் சிறுநீர் பாதை தொற்றை குழந்தைகளிடையே கண்டறிவது கடினம் என்பதால், காய்ச்சல், வாந்தி, எரிச்சல் போன்ற பிற அறிகுறிகள் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
தாயின் உணவுப் பழக்கம்
ஒரு குழந்தையின் சிறுநீர் நாற்றம் வீசுவதற்கு மற்றொரு காரணம் தாய் சாப்பிட்ட உணவாக கூட இருக்கலாம். அஸ்பாரகஸ், வெங்காயம், பூண்டு போன்ற வாசனை மிகுந்த உணவுகளையும், காய்கறிகளையும் சாப்பிடுவது குழந்தையின் சிறுநீரை வாசனையடையச் செய்யும்.
எந்த நேரத்திலும், உங்கள் குழந்தையின் சிறுநீரின் நிறம் தெளிவாக இல்லை என்பதை நீங்கள் கவனித்தால், நீங்கள் என்னமாதிரியான உணவுகளை சாப்பிடுகிறீர்கள், மற்றும் எவ்வளவு நீரேற்றமாக இருக்கிறீர்கள் என்பதை கண்காணிப்பது அவசியம்.
ஏனெனில் உங்கள் உணவு அல்லது நீரிழப்பு காரணமாக குழந்தையின் சிறுநீர் நிறம் மற்றும் வாசனை கடுமையானதாக மாறலாம்.
குழந்தையின் சிறுநீர் அம்மோனியாவைப் போல வாசனை:
சில நேரங்களில், ஒரு குழந்தையின் சிறுநீர் வலுவான அம்மோனியாவின் வாசனையை ஏற்படுத்தக்கூடும். அம்மோனியாவுக்கு விரும்பத்தகாத மற்றும் கடுமையான வாசனை உள்ளது. சில நேரங்களில் குழந்தையின் சிறுநீரில் இந்த வாசனை சற்று அதிகமாக இருக்கும். ஆனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அதிகாலை சமயங்கள் அல்லது குழந்தையின் உடலில் ஏற்படும் நீரிழப்பு காரணமாக இது நிகழலாம்.
குழந்தையின் சிறுநீர் மலக்கழிவுகளை போல வாசனை:
உங்கள் குழந்தைக்கு UTI இருப்பதற்கான எளிய அடையாளமாக இந்த பிரச்சனை ஏற்படலாம். சில நேரங்களில், ஆசனவாயிலிருந்து வரும் பாக்டீரியாக்கள் உங்கள் குழந்தையின் சிறுநீர்க்குழாய்க்குள் நுழைந்து தொற்றுநோய்க்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தை இதுபோன்ற பிரச்சனையில் சிக்காமல் இருக்க, அவர்களின் ஆசனவாய் பகுதியை ஒழுங்காக சுத்தம் செய்து துடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குழந்தையின் சிறுநீர் வினிகரைப் போல வாசனை:
உங்கள் குழந்தையின் சிறுநீர் வினிகர் போல இருந்தால், அது நீரிழப்பு அல்லது UTI அல்லது நீங்கள் சாப்பிட்ட ஏதாவது ஒரு உணவு காரணமாக இருக்கலாம். சிறுநீரில் இருந்து வரும் வினிகர் வாசனை உங்கள் குழந்தையின் உடல் குளிர்ச்சியடைந்ததை உணர்த்துகிறது.
உங்கள் குழந்தை ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்களின் சிறுநீர் வினிகரின் வாசனையை கொண்டிருக்கும். இது அமில ரிஃப்ளக்ஸ் காரணமாகவும் இருக்கலாம். மேலும், குழந்தையின் உடல் போதுமான அளவு லாக்டோஸை உற்பத்தி செய்ய முடியாவிட்டால், அது நாற்றம் கொண்ட சிறுநீர் கழிக்க வழிவகுக்கும்.